உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

மனம் போன போக்கில்....

- சைவ சரபம் மா.பட்டமுத்து

சங்கரன்கோவில்


    "இந்தியா டுடே" 16-5-2012 தேதி இதழில் கவர் ஸ்டோரி நித்தியானந்தா என்ற தலைப்பில் 17 ஆம் பக்கத்தில் "கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவாவடுதுறை ஆதீனத்தில் யார் அடுத்த ஆதீனம் என்ற சண்டையில் ஒரு ஆதீனம் மற்றொரு ஆதீனத்தை கொலை செய்து விட்டார்" என்ற பொய்யான செய்தி சைவ மக்களை அதிர்ச்சியடையச் செய்து விட்டது.  கொல்லப்பட்டதாகத் தாங்கள் கூறும் ஆதீனம் தான் தற்போதையத் திருவாடுதுறை ஆதீனத்து 23 ஆம் குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீசிவபிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள அவர்களைக் கொல்ல முயற்சி செய்யப்பட்ட அன்றிரவு படுக்கையறையில் பதுங்கி இருந்த கூலிப்படையினர் ஸ்ரீநமச்சிவாய மூர்த்திகள் கிருபையால் சுவாமிகளைக் கொலை செய்ய இயலாமல் தப்பித்து விட்டனர்.

சைவ பணியையும், தமிழ்ப் பணியினையும் அருமையாக ஆற்றி வரும் ஆதீன கர்த்தரைக் கொலை செய்யப்பட்டார் என்று கூசாமல் பொய் சொல்லும் இந்தியா டுடேயை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

    தருமபுரம், திருவாவடுதுறை ஆதீனங்களின் சொத்துக் கணக்குகளைக் கஷ்டப்பட்டுத் திரட்டி வெளியிடும் இந்தியா டுடே RTI மூலம் இவ்வாதீனங்களின் சமூக, சமய, தமிழ்ப் பணிகளின் விபரங்களை தொகுத்து பிரசுரக்கலாமே! அவர்களைப் பாராட்ட இந்தியா டுடேக்கு மனமில்லை போலும்.  எங்கோ இருக்கின்ற இளையாங்குடியில் காலையில் 30 பள்ளிச்சிறுவர்களின் பசி தீர்க்கும் புனிதப்பணியையும், விளம்பரமில்லாத (வள்ளியூர் அருகே) சிறுமளஞ்சி சிவாலயத்தில் 30 அன்பர்களுக்கு மதியம் அன்னம் பாலிப்பு நற்பணியும் இதே போல் தமிழகத்தின் பல இடங்களில் பசி தீர்க்கும் அருட்பணியும் ஆற்றி வரும் திருவாவடுதுறை ஆதீனத்தின் சமுதாய, சைவ தமிழ்ப் பணிகள்ப் பற்றி எழுத மனமில்லாத இந்தியா டுடே மதுரை ஆதீன விவகாரத்தில் தருமபுர, திருவாவடுதுறை ஆதீனங்களையும் இழுத்து மனம் போன போக்கில் எழுதியதை சைவ உலகம் பார்த்து கொண்டு சும்மா இருக்காது.


    

"மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்"
"வைதிக சைவம் பரக்கவே"

 

மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெ ல்லாம

"வைதிக சைவம் பரக்கவே"

                         

 

திருச்சிற்றம்பலம்.