உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

தடுத்து நிறுத்து சொக்கா!

- சைவ சரபம் மா.பட்டமுத்து

சங்கரன்கோவில்


  அன்புள்ள ஆசிரியருக்கு

  "ஆட்டத்தை நிறுத்து சொக்கா" கட்டுரை அருமை.  துறவிகளின் இலக்கணத்தை தமக்கே உரிய நகைச்சுவைப் பாணியில் சித்தரித்துக் காட்டி மதுரை ஆதீனக் கேலிக்கூத்தைத் தோலுரித்துக் காட்டுகிறார் கட்டுரையாளர்.  ஆனால் திருஞானசம்பந்தப் பெருமான் "பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே" என்று பாடி சமண, புத்த இளம் துறவிகளைத் தம் பக்கம் இழுத்தார் என்று எழுதுகிறார். மதுரையம்பதிக்குத் தம்மைக் காண வந்த தமது அருமைத் தந்தை சிவபாத இருதயரிடம் சீர்காழியில் (கழுமல வளநகரில்) தமக்கு ஞானப் பாலூட்டிய "பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை" யின் நலம் விசாரிப்பது போல் அமைவது அத்திருப்பதிகம் எவரையும் சைவத்திற்கு வலுக்கட்டாயமாகக் கவர்வதற்கு வந்தவரல்லர் திருஞான சம்பந்தர்.

"வேத நெறி தழைத்தோங்க, மிகு சைவத்துறை விளங்க, பூத பரம்பரை பொலிய" திருஞானசம்பந்தர் அவதரித்தார் என அருளுகிறார் சேக்கிழார் பெருமான்.  "நீ நாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யாரறிவார் சாநாளும் வாழ்நாளும்" என யாக்கை நிலையாமையைக் காட்டும் திருஞான சம்பந்தரின் வாக்கினைக் கேட்டு அந்த இளந்துறவிகள் சம்பந்தரின் வாக்கினைக் கேட்டு அந்த இளந்துறவிகள் மீண்டும் சமண, புத்த மதத்திற்குப் போய் விட மாட்டார்களா? போதிமங்கையில் புத்த நந்தியுடன் வாதாடுகின்ற சுவாமிகள் ஓரிடத்தேனும் 'பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை யிருந்ததே" என்று கூறி வாதாடுகிறாரா? சைவ மக்களின் குருநாதராகிய திருஞான சம்பந்தப் பெருமானை அவதூறாகக் கட்டுரையாளராகியப் பெரியவர் எழுதுவதைத் தடுத்து நிறுத்து சொக்கா?

 


    

"மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்"
"வைதிக சைவம் பரக்கவே"

 

மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெ ல்லாம

"வைதிக சைவம் பரக்கவே"

                         

 

திருச்சிற்றம்பலம்.